Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

தமிழர் கட்டடக் கலை வரலாற்றில் பல்லவர் காலம்

தமிழர் கட்டடக் கலை வரலாற்றில் பல்லவர் காலம்


தமிழ் பண்பாட்டு மரபில் புதியதொரு பாய்ச்சலை அல்லது ஆக்கத்தை உருவாக்கியவர்கள் பல்லவர்களாவார். இதனாலேயே ஆராய்வுப் போக்கிலும் இக்காலத்தை தனித்து அடையாளம் காணும் போக்கு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்திய திடீர்ப்புரட்சிகளே இத்தனித்து இனங்காணலுக்கான காரணங்களாகும். அதாவது சங்க காலத்தில் காணப்பட்ட பண்பாட்டு நிலைகளும், வடநாடு சார்ந்த பண்பாடுகளுடன் வந்த பல்லவரது பண்பாடு கலந்த நிலையில் தோற்றம் பெற்ற ஒரு புதிய பண்பாடாக இப்பல்லவர் காலம் காணப்படுகின்றது. இதனால் தான் இன்றிருக்கின்ற தமிழ் பண்பாட்டின் மூலத்தை தேடிப்பார்த்தால் அது பல்லவர் காலத்திலேயே கிடைக்கின்றதென அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் தான் இக்காலம் தனியடையாளம் பொருந்தியதாக மாறியது. அதில் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாகிய கட்டடக் கலையும் முக்கிய முனைப்புக் கொள்ளலை பெறுகின்றது. அது தென்னிந்திய கட்டடக் கலை வரலாற்றில் எழுச்சி மிக்க முக்கியத்துவத்தை எட்டி நிற்கின்றது. பல்லவர் கால கட்டடக்கலை தமிழர் கலை வரலாற்றில் பெறும் முக்கியத்துவத்தை ஆராய முன்பு, தமிழ் நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் சங்க காலத்தில் கட்டடக்கலை எவ்வாறு இருந்தது என ஆராய்தல் அவசியமானதாகும்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதலாம் நூற்றாண்டிற்கும், ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டிலே கட்டப்பட்டிருந்த சில கட்டடங்களைப் பற்றிய குறிப்புக்களும் வர்ணனைகளும் இலக்கிய ஆதாரங்களிலே கிடைக்கின்றன. கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட பட்டினப்பாலையில், காவிரிப்ப+ம் பட்டிணத்தில் இருந்த சில கட்டடங்களை பற்றிய வர்ணனைகள் இடம் பெற்றுள்ளது. அத்துடன் அகம், புறம் கூறும் பெரும்பாலன சங்க இலக்கிய செய்யுள்களில் நடுகல் கோயில்களை பற்றிய செய்திகள் வருகின்றன. இதற்கு பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பட்டிணப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலும் கட்டடங்களைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. இவற்றின் உதவி கொண்டு தமிழ் நாட்டின் கட்டடங்கள் பற்றி சில தகவல்களைப் பெற முடிந்தாலும் அக்கட்டடங்களின் பாணி பற்றி தெளிவாக வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. இவை செங்கல், மரம், ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டப்பட்டனவென்றும் பொதுவாக கூறப்படுகின்றது. இத்தகைய கட்டடங்களின் அழிபாடுகள் தமிழ் நாட்டிலே இதுவரை அகழ்ந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அரிக்க மேடு, காவிரிப்ப+ம் பட்டிணம் ஆகிய இடங்களிலே அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்கள் கிரேக்க, ரோம வர்த்தகர்களாலே அமைக்கப்பட்டிருந்த வர்த்தக பண்டகசாலைகளாகவே காணப்படுகின்றன.
இப்படியானதொரு சூழலில் நிலைக்க கூடிய கற் கட்டிடங்களை தமிழ் கலை வரலாற்று மரபு கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முன் அமைத்துக் கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. தமிழ் நாட்டுக் கட்டடக் கலையின் நிலை இவ்வாறிருக்கையில் வருகை தந்த பல்லவர்கள் அதற்குள்; பல மாறுதல்களைச் செய்தனர். அந்த மாறுதல்களே இக்கால கட்டடக் கலைக்கு முக்கியத்துவத்தையளித்தன. இதனால் கீழ் வரும் அம்சங்களில் தமிழ் கலை வரலாற்றில் பல்லவர் கால கட்டடக்கலை முக்கியம் பெறுகின்றது. 01. அழியாப் பொருட்களைக் கொண்டு ஆலயங்கள், கட்டடங்கள் அமைக்கும் மரபை தொடக்கி வைத்ததனால் இக்காலம் முக்கியம் பெறுகின்றது. அதாவது பல்லவர் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் அழியாப்
பொருட்களைக் கொண்டு கட்டடங்கள் அமைக்கும் முறை காணப்படவில்லை. ஆனால் அழியகூடிய பொருட்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் சங்க கால நகரங்களில் இருந்துள்ளதை அக்கால இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பல்லவர் வருகையுடன் இதுவரை தமிழக கட்டடக்கலை அறிந்திராத இப்புது மரபு அறிமுகமாகின்றது. மண், மரம்,சுதை. சுண்ணாம்பு போன்ற அழியாப்; பொருட்களைக் கொண்டு மகேந்திர வர்மன் கட்டடங்களை அமைப்பித்தான் என மண்டகப்பட்டச் சாசனம் தெரிவிக்கின்றது. இந்த அறிமுகத்தோடு தமிழகத்தில் அழியாத பொருட்களைக் கொண்டு கட்டடங்கள் அமைக்கும் முறையொன்று தொடர்ந்து வந்த காலங்களில் வளர்ச்சி பெற்றது. இதனால் தமிழக கட்டடக் கலை வரலாற்றில் பல்லவர் காலம் முக்கியமாகின்றது. 02. பல்லவரது கலைமரபும். சங்க காலத்து கலைமரபும் இணைந்து புதியதொரு கலைவடிவத்தை பல்லவர்கள் படைத்தமையினால் இக் காலம் முக்கியம் பெறுகின்றது. பல்லவர் வருகைக்கு முன்னர் தமிழகத்தில் கட்டடங்களை அமைக்கும் முறையொன்று காணப்பட்டுள்ளது. ஆனால் அவை நின்று நிலைக்க கூடிய வகையில் அமைப்பு பெறவில்லை. இந்தியாவின் தென்பாகம் அதிகளவிலான புறப்பண்பாடுகளை தழுவிக் கொள்ளாமல் தனித்துவமான போக்கில் இயங்கியமையாலும் வளர்ச்சி நிலையை எட்டி நிற்கவில்லை.
ஆனால் வடநாடு தரைவழியான பண்பாட்டுத் தொடர்புகளை பல்வேறு நாகரீகங்களுடனும் பேணியிருந்தது. இனப்பரம்பல்களும், கலாச்சார பரம்பல்களும் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட வண்ணமேயிருந்தன. இவ்வாறானதொரு சூழலில். அந்திர தேசத்தில் குறுநில மன்னர்களாக இருந்த பல்லவர்கள் பல்வேறு பண்பாடுகளையும் கற்றுத் தேர்;தவர்களாக இருந்தனர். அறிவியல் வளர்ச்சியிலும், கலாச்சார வளர்ச்சியிலும் சமகால சூழலுக்கு நிகரான வளர்ச்சியை எட்டியிருந்தனர் எனலாம். இந்த அறிவியல் ரீதியான அறிவாற்றலுடன் தமிழகத்தை கைப்பற்றிய பல்லவர்கள், தமிழ்நாட்டின் இயற்கை சூழலை இப்பிராந்தியத்தில் வாழ்ந்தவர்களின் கலைமரபுகளை விளங்கிக் கொண்டு அதற்கு மேலாகக் கட்டடங்களை அமைத்தனர். இதனால்; இரண்டும் கலப்புற்று புதிய கலை மரபொன்று உருக் கொண்டது. இந்த வகையிலும் பல்லவர்கால கட்டடக்கலை முக்கியம் பெறுகின்றது.  மகாவலிபுரத்தின் உட்பகுதிச் சிற்பம் 03. சங்க காலத்திலும். சங்கமருவிய காலத்திலும் கிராமிய மட்டத்திலான ஆலயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அக்கோயில்களுக்குள் ஆகம நெறி சாராத சமய நெறிகளுக்குள் அடங்கும் தெய்வங்களுக்குரியனவாக அவ்வாலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையை முற்றுமுழுதான மாறதலுக்குள்ளாக்கியவர்கள் பல்லவராவார். இதுவரையில் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த கட்டடக் கலைமரபிற்கு பதிலாக ஆகம கலைமரபை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அந்த ஆகம விதிகளுக்கு அமைவாக கோயில் கட்டடங்களை ஆக்கினர். அந்த வகையில் கற்பக்கிரகம், அந்தராளம், முன் மண்டபம், மகா மண்டபம், கொடி மண்டபம். சுற்றுப் பிரகாரம், சுற்றுப் பிரகார தெய்வங்கள், விமானம், கோபுரங்கள் உள்ளிட்ட கட்டட நிலைகளை அமைக்க ஆகம முறைகளைப் பயன்படுத்தினர். ஆகம முறைபடி கட்டடங்களை அமைத்ததோடு சிவாகமங்கள் குறிப்பிடும் சிற்ப சாஸ்திர மரபுகளைப் பின்பற்றி சிலைகள். சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் ஆகியவற்றை அமைத்த பெருமை பல்லவரையே சாரும். இதுவரை காலமும் சுடுமண்ணிலேயே தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. பல்லவராட்சியை தொடர்ந்து தமிழகத்தில் அரசமைத்த சோழாகளின் விமானம், பாண்டியரின் கோபுரம், விஜயநாகர நாயக்க காலத்தின் சிற்பங்களும் அலங்காரங்களும், பரிவாரத் தெய்வங்களும் அவர்களது ஆட்சிக்காலத்தின் மகத்தான சாதனை எனக்கூறப்பட்டாலும், அவற்றுக்கெல்லாம் கருவ+லமாக இரந்த காலம் பல்லவர் காலமாகும். மாற்றம் ஒன்றுக்குள் செல்லாதிருந்த தமிழக கட்டடக் கலையுகத்தை புதியதொரு பரிமாணத்தை நோக்கி திசைப்படுத்தி, சிறப்புச் செய்தவர் பல்லவர்களாவார். இதனாலும் தமிழகத்திலுள்ள வரலாற்று ஆலயங்கள் அனைத்தினதும் கட்டடக்கலை வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் அவற்றின் தொடக்க புள்ளியாக கி.பி.6 க்கும் 10க்கும் இடைப்பட்ட பல்லவர் காலம் காணப்படுவதாலும், தமிழக கட்டடக்கலை வரலாற்றில் பல்லவர்காலம் முக்கியம் பெறுகின்றது. 04. இந்தியாவில் மூன்று பிரதான
கலைபப்hணிகளுண்டு அவை முறையே திராவிட, நாகர, வேசத பாணிகளாகும். இவற்றுள் முதன்மை பெற்ற கலை மரபாக விளங்கும் திராவிடக் கலைப்பாணியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் பல்லவர்களாவார். அதாவது அழியாத பொருட்களை கொண்டு கட்டடங்களை அமைத்து வேறெந்த பின்பற்றல்களும் இல்லாமல் ஒரு தனித்துவமான கட்டட நிர்மாணப் போக்கை தொடக்கி வளர்த்துச் சென்றவர்கள் பல்லவராவார். இன்று வரைக்கும் இத்தனித்துவ கலைப்போக்கை கலை வரலாற்றாசிரியர்கள் திராவிட கட்டடக்கலை மரபொன்றே அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்டடக் கலை மரபின் தோற்றமும் பல்லவர் காலத்துடன் முனைப்பு பெறுவதால் கலை வரலாற்று நோக்கில் பல்லவர் காலம் முக்கியம் பெறுகின்றது. அத்திராவிடக் கலைமரபின் தொடக்கத்தோடு மூன்று பிரதான கட்டடக் கட்டுமான எழுச்சியோடு அது மேலும் வளர்ச்சி பெற்றது. அவை முறையே, குடைரை மண்டபங்கள் தனிக்கற்கோயில்கள், கற்றளிகள். பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனோடு பெருமளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப குடைவரை மண்டபக்கோயில்கள், ஒருபுறத்தில் “இந்தியாவின்” ஏனைய பிரதேசங்களின் குடைவரை மண்டபங்களின் பொது அனுபவத்தின் பகுதியாக இருப்பினும், பின் வந்த தமிழர் கட்டடக்கலை போக்கிற்கு அடிப்படைகளையும் உருவாக்கியிருந்தது. சமணத் துறவிகளுக்காக இயற்கையான குகைகளிற்குள்ளே செதுக்கிய கற்படக்கைகளின் முன் அனுபவங்களில் இருந்து, குடைவரை மண்டப மரபிற்கு உந்தப்பட்ட கலைப்படைப்பாளர்கள் இவ்வாறு உருவாக்கினர் எனப்படுகின்றது. இயற்கையான பாறைகளை உட்புறமாகக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்குடை வரைகள் கர்ப்பக்கிருகம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சமாந்தரமான கர்ப்பக்கிருகங்கள் அவற்றிற்கு முன்பாக ஒவ்வொரு தூண்களுடைய மண்டபமாகிய அடிப்படைப் பகுதியளையும், ஆரம்ப கட்டத்திற்குரிய பாதபந்தக, அதிட்டானம், தூண்கள், துவார பாலகர் முதலியவற்றினைக் கொண்டிருந்தது. பாரிய சதுரத்தன்மை என்பதை முன்னிறுத்திய இவ்வகைக்; குடைவரை மண்டபங்களை மண்டகப்பட்டு, பல்லவாரம் மாமண்ரூர் முதலிய இடங்களில் காணலாம். இதற்கு அடுத்ததாக மாமல்லனால் தனக்கற் கோயில்கள் கட்டும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தனிக்குன்றகளை உள்ளும் புறமுமாகச் செதுக்கி குன்றுகளிலிருந்து கோயில்களை அமைக்கும் முறையைக் குறிக்கும். சாளுக்கிய நாட்டிலிருந்து இம்மரபு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது. குடைவரையிலிருந்து தனிக்கற்கோயிலின் வேலைப்பாடுகள், கட்டடத்தின் உடற்பாக செதுக்கற் வேலைப்பாடுகளாக அமைகின்றன. இதனை பஞ்ச பாண்டவர் ரதங்களில் காணலாம். அவை பிரதானமாக ஆறு விருத்திகளை அடைகின்றன. அதிட்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, தூபி என்ற வரிசையில் பொருவாக அமையும். இதற்கடுத்ததாக கற்றளிகள் உருவாக்கப்பட்டன.
பாதைகள் உள்ள இடத்தில் கோயில் செதுக்கும் மரபு விடுபட்டு, தெரிந்தெடுக்கப்பட்ட இடத்தில் சூழலைப் பயன்படுத்தி ஆலயம் அமைக்கும் முறையே இது. கட்டடத்தின் அமைப்பிலும், உருவத்திலும் சுதந்திரத்தையளித்தது. இவ்வகை கோயில்களின் முதற்பருவம் மிகவும் சிறு அளவுடையது. கர்ப்பக்கருகத்தின் முன்பிருந்த முகமண்டபமும், முழு அளவில் அர்த்த மண்டபம் அறிவதும், பத்ம பந்தம் அறிமுகமாகவதும் இவ்வமைப்பு முறையில்தான். மாமல்லபுரம் பல்லவர் காலமானது தமிழக அல்லது திராவிட கட்டடக்கலை மரபில் புதியதொரு பரிணாமத்தை வழங்கியுள்ளது. அதற்கு இன்னும் மிஞ்சிக்கிடக்கும் பல்லவ கட்டடக்கலை எச்சங்கள் சான்றாகின்றன. இக்கட்டடக் கலை மரபானது தமிழகத்தோடு மாத்த்pரம் நின்று விடாது கடல் கடந்து ஈழத்திலும் செல்வாக்கு செலுத்தியது. இவ்வம்சம் பிற்பட்டகால ஈழத்தமிழர் பண்பாட்டு விருத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
நன்றி kovetha.blogspot.com இணையத்தளம் பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: