Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

ஓவியர் லியோனார்டோ டாவின்சி

புகழ்பெற்ற ஓவியரான லியோனார்டோ டாவின்சி, பத்து மனிதர்களின் ஆற்றலை ஒருங்கே கொண்ட பேரறிஞர் (ten men-in-one) எனப் போற்றப்பட்டவர். இவர், ஓவியர் மட்டுமன்றி அறிவியல் கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி, உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை, வடிவமைப்பாளர், போர்த்துறைப் பொறியாளர், என பல்துறைப் பேரறிஞராக விளங்கியவரே ஓவியர் டாவின்சி. எனினும், இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது மோனலிசா என்ற புன்னகை சிந்தும் புகழ்பெற்ற ஓவியமே எனக் கூறலாம்.

பன்முகப் பயிற்சியும், பல்வகைப் பேரறிவும் கொண்ட லியோனார்டோ டாவின்சி பிரபஞ்ச மனிதர் (universal man) எனப் போற்றப்பட்டவர், இந்தப் பட்டப் பெயருக்காக அவர் மூளை புதுப்புது கண்டுபிடிப்புகளாலும், உத்திகளாலும், கருவிகளாலும் நிறைந்திருந்தது. அவர் சுமார் 7,000 பக்கங்கள் உடற் கூறியல் உண்மைகள் பற்றி எழுதியிருந்தார்.

இவரது ஓவியங்கள் போர் உத்திகள், குறியீடுகள், பறக்கும் எந்திரங்கள், சமிக்கைகள், வண்ண ஓவியங்கள், புதிர்கள், நகர்ப்புற வடிகால் அமைப்புகள் என்று வியப்பூட்டும் கதம்பக் களஞ்சியமாய்க் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இவரது தந்தை மிகப் பணவசதி படைத்த ஒரு வழக்கறிராவார். 1452 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 15ம திகதி டாவின்சி மகனாகப் பிறந்தார். எனினும், டாவின்சிக்கு தாயின் அரவணைப்பு நீண்ட காலத்திற்குக் கிடைக்காத காரணத்தினால் தந்தையுடனும், சிறிய தந்தையுடனுமே தன்னுடைய இளமைக்காலத்தைக் களித்தார்.

தன்னுடைய 14ஆம் வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் (modeling) ஆர்வம் கொண்டிருந்தார். டாவின்சியின் ஆர்வத்தினைக் கண்ட அவரது தந்தை ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற சிற்பியிடம் அவரைப் பயிற்சிக்கு அனுப்பினார். அங்கே டா வின்சி பல்துறைப் பயிற்சியும் தனது முப்பதாவது வயது வரை பல்வேறு துறைகளில் கல்வி கற்பதிலும் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

ஆந்திரயாவில் பல பயிற்சிகளையும் பெற்றதன் பின்னர் ஃபிளாரன்சுக்குத் திரும்பிய டாவின்சி 1503இல் புகழ் பெற்ற மோனோ லிசா வண்ண ஓவியத்தை தீட்டத் துவங்கினார். அவரது ஓவியப் பணியரங்கத்தில் அமர்வதற்காக ஒவ்வொரு நாள் மாலையும் மோனோ லிசா வந்து சென்றார். மூன்றாண்டு கடின உழைப்பிற்குப் பின்னர் 1506 இல் இந்த ஓவியம் நிறைவு பெற்றது.

ஓவியத்தைக் கண்ட நாமே இத்தனை வருடங்களின் பின்னரும் வியப்பிலாழ்ந்து போகின்றோம். என்றால் அந்த ஓவியத்தினை வரைந்தவரின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியாது.

இந்த வியப்பு பல கோடி ஆண்டுகளாக மக்களிடம் நிலவி வருவதைக் காண்கின்றோம். இந்த மோனலிசா ஓவியம் பிரான்சிலுள்ள அருங்காட்சிசாலை ஒன்றில் இன்றும் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.

மோனோ லிசா ஓவியத்தை வரைந்த பின்னர், டாவின்சி பிரன்சுக்கார்களின் ஆட்சியிருந்த மிலன் நகருக்குத் திரும்பி 1506 முதல் 1513 வரை அங்கிருந்தார். அங்கு கிறிஸ்தவகோயிலில் வைத்து வணஙகத்தக்க ஓவியங்களைத் தீட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. குழந்தையுடன் இருக்கும் கன்னித்தாய் அவர் வரைந்த ஓவியங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பின்னர் 1513 ஆம் ஆண்டிலிருந்து தனது இறுதிக்காலம் வரை ரோம் நகரிலேயே முதலாம் ஃபிரான்சிஸ் மன்னரின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பு டாவின்சிக்குக் கிடைத்த்து. பிரான்சிஸ் மன்ன்ன் அவருக்கு மாத ஓய்வூதியம் வளங்கியதுடன், தனது நாட்டில் இருக்கச் செய்தார்.

சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்ட இவரின் “கடைசி விருந்து” (The Last Supper), “மோனா லிசா” (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியிருந்தார்.

கட்டிடக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் இறக்கைகளுடனும், மேலே சுழலும் விசிறியுடனும் கூடிய பல்வகைப்பட்ட பறக்கும் எந்திரங்களை வடிவமைத்து உருவாக்கியதுடன், நீர்க் கடிகாரம் ஒன்றையும் இவர் உருவாக்கினார். பொறியாளர்களுக்கு உதவும் பொருட்டு கட்டிடப் பொருள்களை மேலே தூக்கிச் செல்ல பளு தூக்கும் பொறியை வடிவமைத்துக் கொடுத்தவரும் இவரே. பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்ட லியோனார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் இப்பூவுலக வாழ்வை நீத்தார். டாவின்சி மறைந்து 5 நூற்றாண்டுகள் கடந்துள்ள போதிலும் அவர் வரைந்த ஓவியங்கள் மூலமாக புகழ் இன்றும் அழியாமல் உள்ளது.


நன்றி: மின்னல் இணையம்
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: