Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

ஓவியர் மைக்கல் அஞ்சலோ

ஓவியர் மைக்கல் அஞ்சலோ புதிய இணைப்பு
கலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல் யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர் களது தனித்துவமான ஆற்றல்களும் கலை நுட்பங்களுமே காரணமாக அமைகின்றன. அந்த வகையில் ஐரோப்பியக் கலைஞர்கள் கலைத்திறன் மிக்கவர்களாகவும் கலையுணர்வு மிகைத்தவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வகை கலைஞர்களின் ஒருவரான மறுமலர்ச்சிக்கால ஓவியர் மைக்கலாஞ்சலோ குறிப்பிடத்தக்க வராவார். புகழ் பெற்ற ஓவியர்களின் வாழ்க் கையை ஆராய்ந்தால், அவர் களது தந்தை, தாய், சகோதரர் என யாராவது ஒருவர் கலை துறையில் ஈடுபாடு கொண்ட வர்களாகவோ அல்லது ஊக்கமளிக்கின்றவர்களாகவோ காணப்படுவர். ஆனால், கலைத் துறையில் ஈடுபாடில்லாத கலைத்துறையில் வெறுப்புக் கொண்ட ஒரு தந்தைக்கே இவர் மகனாகப் பிறந்தார். 1475 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் நகரில் காசல் கப்aல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை கலைஞனாகக் கூடாதென தடை விதித்த போதும் சிறு வயதிலிருந்தே சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். விசேடமாக மனித உருவங்களையே அதிகம் விரும்பி உருவாக்கினார். ஓவியமாக இருந்தாலும், சிற்பமாக இருந்தாலும் ஒரு பிரிவில் சிறந்து விளங்க வேண்டுமாயின் அடிப்ப டையாகக் கோட்டுச் சித்திரத்தில் தேர்ச்சியிருக்க வேண்டும். இதை உணர்ந்த மைக்கலாஞ்சலோ இதற்கென அதிக பயிற்சி எடுத்துக் கொண்டார். குறிப்பாக மனித உடற் கூறுகளை நன்கு வரைந்து பழகினார். இந்த முயற்யில் வைத்தியசாலைகளில் உள்ள பிணக் கிடங்குகளில் பிணம் அறுக்கும்போது, பக்கத்திலிருந்து நன்கு கவனித்து கோட்டுருவங்களை வரைந்து பயிற்சி பெற்றார். இதன் காரணமாகவே, இவரது கலைப் படைப்புக்கள் வியக்கத்தக்க அளவு நுட்பம் வாய்ந்தவையாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் மிளிர்வதை கலையுலகம் உணர்கின்றது. ஒரு கலைஞனின் ஆற்றல்களையும் திறன்களையும் அவனது ஆக்கங்களே வெளிப்படுத்துகின்றன. கலைஞன் மரணித்த போதும் அவனது கலைகள் இவ்வுலகில் கலாரசிகர்களின் உள்ளங்களில் வாழ்கிறது. இதனால், கலைஞனின் வரலாறும் உயிர் வாழ்கிறது. மைக்கலாஞ்சலோவின் பிர மாண்டமான பிரமிக்கத்தக்க படைப்புக்கள் வத்திகானிலுள்ள சிஸ்ரைன் தேவாலயத்தில் காணப்படுகின்றது. கி.பி. 1508 ல் யூலியஸ் போப் பாண்டவரின் வேண்டுகோளுக்கிணங்க சிஸ்ரைன் தேவாலயத்தினை அலங்கரிக்க ஒப்புக் கொண்டார். குறிப்பாக சிஸ்ரைன் தேவாலய த்தின் 450 அடி பரப்புக் கொண்ட மேற் கூரையினை பல பிரவுகளாகப் பிரித்து 449 மனித உருவங்களை தத்துரூபமாக வரைந்துள்ளார். இதில் ‘உலகைப் படைத்தல்’ எனும் ஓவியத் தொகுப்பு மிகப் பிரதானமாகும். பைபிளில் கூறப்ப ட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தேவாலயத்தின் மேற்கூரையில் வரையப்பட்டதே ‘உலகைப் படைத்தல்’ எனும் ஓவியமாகும். இவ் ஓவியத் தொகுதியில் ‘ஆதாமைப் படைத்தல், ஏவாளைப் படைத்தல்’ ஆகிய ஒவியங்களும் வரையப்பட்டுள்ளன. இது உலகின் ஆதிமனிதனான (முதல் மனிதனாகக் கருதப்படுகின்ற) ஆதாம், ஏவாள் ஆகிய இருவரையும் இறை வன் சிருஷ்டிப்பதைக் காட்டுகின்றது. அத்துடன் கிரகங் களையும், சூரியன் சந்திரன் ஆகியவற்றையும் படைக் கும் செய்தியையும் ஒரு தொகுதியில் மைக்க லாஞ்சிலோ தத்துரூபமாகக் காட்டியுள்ளார். இத்தேவாலயத்தின் பின்புறச் சுவரில் இறுதித் தீர்ப்பு எனும் ஓவியத் தொகுதியும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 4 1/2 ஆண்டு கள் முகத்தில் வர்ணங்கள் ஒழுக உயிரோட்டமான ஓவியங்களைக் கொண்டு சிஸ்ரைன் தேவாலயத்தின் மேற் கூரையை அலங்கரித்தார். சமகாலத்தில் கலைஞனாக விரும்பும் ஒவ்வொரு வரும் நமக்கு முன்னர் உள்ள உள் நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர் களைப் பற்றி கற்றுக் கொள்வது இன்றிய மையாத ஒன்றாகும். ஏனெ னில், தான் வரையும் பாணிதான் சரி என்ற கோட் பாடுகளை வளர்த்துக்கொண்டு ஒரு கலைஞன் ஆக்கங்களை உருவாக்க முடியாது. பப்லோ பிகாசோ, லியானாடோ டாவின்ஸி, வின்சன்ட் வான்கோ, றபாயல் போன்ற பல பிரபல்யமான கலைஞர்கள் தனக்கே உரித்தான தனித்து வமான பாணிகளில் ஆக்கங்களை உருவாக்கினர். அத்துடன் ஏனைய கலைஞர்களின் கலையாக்கங்களை இரசித்தனர். மைக்கலாஞ்சலோவின் மனித உருவங்கள் உண் மையான மனிதனைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே அவரது படைப்புகளின் சிறப்பம்சங்களாகும். எனவே ஒவ்வொரு கலை ஞனும் தனக்கே உரித்தான பாணிகளில் பல்வேறு பட்ட மரபுகளில் வரைவர் என்பது உண்மை யாகும். மைக்கலாஞ்சலோ மனித உருவங்களை அமைப்பதிலும், நிறந் தீட்டுவதிலும் இயற்கையான உயிரோட்டமான பாணியையே மிகவும் பயன்படுத்தினார். மனித உருவங்களின் முக பாவனை, தசைகளின் அசைவுகள் நிறங்கள், ஒளி நிழல்கள், உணர்ச்சி போன்ற பல அம்சங்களையும் தனது ஓவியங்களில் வெளிப்படு த்தினார். இது இவரது கலைத் திறன் முதிர்ச்சி யையே காட்டுகின்றது. சில கலைஞர்கள் ஓவியர்களாக இருப்பார்கள் சிலர் சிற்பிகளாக திகழ்வார்கள். ஆனால், மைக்கலாஞ்சலோ ஒரு தலை சிறந்த ஓவியர் மட்டுமல்லாது ஒப்பற்ற சிற்பக் கலைஞருமாகும். அவருடைய ஆற்றல்களும், கலைத்திறன் முதிர்ச்சியும் அவருடைய கலையாக்கங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக இவரால் செதுக்கப்பட்ட டேவிட் சிற்பம் மிகப் பிரபல்யம் வாய்ந்ததும் கலையம்சம் பொருந்தியதுமாகும். இதனைப் படைப்பதற்கு கிட்டத்தட்ட 1 1/2 வருடங்கள் எடுத்ததாக கருதப்படுகின்றது. மனித உடலில் புற அமைப்பை அழகுற, கலை நேர்த்தியுடன், உள்ளதை உள்ளபடியே செதுக்கி மகா சிற்பி எனும் புகழையும் பெற்றுக் கொண்டார். டேவிற் சிற்பமானது, ஒரு வீரனின் ஆரோக்கியமான உடற் கூறுகளைக் கொண்ட வெற்றுடம்புடன் நிற்கின்ற மனித உருவமாகும். வீதியில் கிடந்த சலவைக் கல்லொன்றை சிற்பமாக்கி கலா ரசிகர்களின் உள்ளங்களில் நிலையாக நடமாடச் செய்த சிற்பி என்றால் அப்புகழ் மைக்கலாஞ்சலோவையே சாரும். இச்சிற்பம் கையை மடித்து இடது தோளில் ஒட்டியும், வலது கை நீண்டு வலது காலில் உடைந்து விடாமல் இருக்க, சிற்பியின் திறமையில் உருவான சிற்பமாகும். ஒரு மனிதனின் உடலில் ஒளி நிழல் விழுவதுபோன்று அளவில் குறையாமலும், அதிகரிக்காமலும் ஒளி நிழல் விழுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். கி. பி. 1497 ல் உரோமில் இருந்தபோது பியேற்றா எனும் சிற்பத்தினை உருவாக்கினார். மரித்த ஏசு கிறிஸ்துவை மடியில் வைத்திருக்கும் கன்னி மேரியின் காட்சியை மிகத் தத்துரூபமாக செதுக்கியுள்ளார். இது மிக உணர்வுபூர்வமாக செதுக்கப்பட்டுள்ளது. மரித்துக் கிடக்கும் ஏசு கிறிஸ்துவின் தொங்கிக் கிடக்கும் தலை, சோர்ந்து கிடக்கும் கைகள், நீண்ட -ஸிlழிu கால்கள் ஆகியன நிஜத்தில் இறந்த ஒரு மனிதரைப் பார்க்கும் உணர்வைத் தருகின்றது. கன்னி மேரியின் முகத்தில் சாந்தம், கருணை, சோகம் என்பன வெளிப்படும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. ஆடைகளின் மடிப்புகளை மிக நேர்த்தியாகவும் உயிரோட்டமாகவும் செதுக்கியுள்ளார். மைக்கலாஞ்சலோவின் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் வளரும் கலைஞர்களுக்கு முன்மாதிரியாகவே அமைகின்றன.
நன்றி தினகரன் வாரமஞ்சரி (29/05/2011) பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

களனி அரச குமாரியை கடலினுள் விடுதல்

களனி அரச குமாரியை கடலினுள் விடுதல்

இவ்வோவியமானது களனி அரச குமாரியை கடலினுள் விடுதல், காவன்தீஸன் காப்பாற்றுதல் என்ற தலைப்பிற்கமைவானது.

 அதனை சோளியஸ் மெண்டிஸ் கீழைத்தேய அல்லது இலங்கைக்கே உரித்தான தேசிய மரபுக்கமைவாக இயற்கை வர்ணங்களின் கலவையைக் கொண்டு வர்ணம் தீட்டப்பட்டு பூரணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சோளியஸ் மெண்டிஸ் அவர்கள் களனி விகாரை, உடுப்பத்தாவ தவபிடவிகாரை போன்றவற்றில் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ளார். இருப்பினும் இவ்வோவியமானது களனி விகாரையில் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

இவர் முப்பரிமாணத் தன்மையினை இவ்வோவியத்தில் காட்டுவதற்காக மிக மென்மையான தூரிகைத் தடங்களைப் பயன்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் புராதன சரித்திர வரலாற்றுக் கதைகளை அதிகம் வரைந்த இவர் இதிலும் அதனை அடியொற்றியே வரைந்துள்ளார் என்பது வெளிப்படையாகும். 

உடலழகு, ஆடையழகு, லயத்துடன் கூடிய ஆடைச்சுருக்கம் என்பன இவருக்கே உரித்தான சில சித்திர தூரித்தட நுட்பங்களாகும். அவை இதிலும் காட்டப்பட்டுள்ளது. மஞ்சள் கலந்த வர்ணச்சேர்கை இவ்வோவியத்தில் பரவிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

கலைஞர். சோமபந்து வித்தியாபதி (இலங்கை)

கலைஞர். சோமபந்து வித்தியாபதி (இலங்கை)

இவர் பன்னிப்பிட்டிய என்ற கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற சிற்பி மட்டுமன்றி சிறந்த நாட்டிக்காரருமமாவார். எனவே இவரது வீட்டில் கோயில் ஓவியங்கள், பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் உள்நாட்டுக் கலைவடிவங்கள் என்பன காணப்பட்டன்.


இவர் தனது பத்தாவது வயதில் தாய்வழித்தாத்தாவிடம் ஓவியம், நடனம் தொடர்பான விடயங்களை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாது அதனைக் கற்றும் கொண்டார். இவர் தனது இடைநிலைக்கல்வியை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் கற்றார். 1945 இல் இந்தியா சென்று நவீன ஓவியங்கள் தொடர்பாக நந்தலால்போஸிடம் பயிற்சியினை பெற்றுக்கொண்டார். அதன் பின்பு புலமை பரிசில் கிடைத்து திவாங்கூர் பல்கலைக்கழத்தில் சிற்பம் தொடர்பாகக் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் காணப்படும் கதகளி நாடகம் தொடர்பாக தனது ஆயவினை மேற்கொண்டார்.

இலங்கையின் சிறந்த ஓவியர்களான ஜேரர்ஜ் கீட் மற்றும் சோளியஸ் மெணடீஸ் என்பர்கள் போலவே சுவரோவியங்களில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ண வேண்டும் என்ற முனைப்பில் செயற்பட்டவர். இந்த அடிப்படையில் இவருடைய அதிகளவான ஓவியங்கள் "வெல்லன்வில" என்ற இடத்தில் அமைந்துள்ள விகாரையில் காணப்படுகின்றது. இதிலும் குறிப்பாப "பத்தாசார" என்ற ஓவியம் தனித்துவமானது. இவருடைய ஓவியங்கள் ஜேரர்ஜ் கீட் மற்றும் சோளியஸ் மெண்டிஸ் போன்றவர்களது ஓவியங்களிலிருந்து வேறுபட்டதாக அமைந்து காணப்படுகினறது. 
இவர் காலனித்துவக் காலத்தில் ஐரோப்பிய மரபுகள் பிரபல்யம் பெற்ற காலப்பகுதியில் கீழைத்தேய அடையாளங்களை அல்லது மரபுகளைப் பாதுகாப்பதில் அக்கரை கொண்டு தனது ஓவியங்களில் அதனை நிலைநிறுத்தினார். இவருடைய ஓவியங்களில் காணப்படும் பிரகாசமற்ற வர்ணப்பயன்பாடு ஓவியத்திற்கு உயிர்பூட்டாவிட்டாலும் ஒரு விதக் கவர்ச்சியின் ஊடே இவ்வோவியங்கள் இன்றும் உயிர்வாழ்கின்றன என்று கூறப்படுகின்றது.

இவர் ஒரு ஓவியர் மட்டுமன்றி பாரம்பரிய நாட்டிக்காரருமாவார். அத்தோடு ஆடை மற்றும் மேடை வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். இவர் சித்திரசேனத் தியட்டர் தயாரிப்புகளில் கூடிய பங்களிப்புக்களை வழங்கினார். அத்தோடு திரைப்படத்துக்கான கலை இயக்குனராகவும் செயற்பட்டார். "வசந்துரு சிறித" என்ற திரைப்படத்தில் இவரது சிறப்பான பங்களிப்பினைக் காணக்கூடியதாக உள்ளது. இதுமட்டுமன்றி இவருடைய ஓவியங்கள் ரஸ்யாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்துப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.



பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

ஓவியர் லியானடோ டாவின்ஸி அவர்களின் “கிறிஸ்துவின் ஞானஸ்தானம்” அல்லது “கிறிஸ்துவின் வெப்டிசம்” ஓவியம் ஒரு பார்வை

ஓவியர் லியானடோ டாவின்ஸி அவர்களின் “கிறிஸ்துவின் ஞானஸ்தானம்” அல்லது “கிறிஸ்துவின் வெப்டிசம்” ஓவியம் ஒரு பார்வை

இவ்வோவியத்தினை மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த சிறந்த ஓவியரான லியானடோ டாவின்ஸி அவர்கள் வரைந்துள்ளார். இது “கிறிஸ்துவின் ஞானஸ்தானம்” அல்லது “கிறிஸ்துவின் வெப்டிசம்” என்று அழைக்கப்படுகின்றது. கன்வஸ் துணியில் எண்ணெய் வர்ணம் கொண்டு வரைந்துள்ளார். 


இடது கையில் சிலுவையை பற்றியவாறும் வலது கையினால் கிறிஸ்துவுக்கு ஜோர்தான் நதிக்கரையில் திருமுலுக்கு அருளப்பரால் ஞானஸ்தானம் வழங்குவதையும், வலது புறம் ஞானக்குழந்தைகளாக சித்தரிக்கப்பட்ட தன்மையில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் இரண்டுபேரும் காணப்படுகின்றனர். 


இவ்வோவியத்தில் முப்பரிமாணத்தன்மையினை காட்டுவதற்கு ஓவியர் கையாண்டுள்ள தூரிகைத் தடங்கள் மிக மென்மையானதாகவும், சில இடங்களில் கடும் வர்ணப்பயன்பாட்டுத் தன்மையினையும் காட்டியிருப்பதும் ஓவியரது சிறந்த கைத்தேர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

ஆடையமைப்புக்கள், மனித உடலியற் கூற்று அம்சங்களுக்கு அமைவானதாக காட்டப்பட்டுள்ள மனித உடல் மெய்நிலையிருப்புக்கள் என்பன ஓவியத்துக்கு மேலும் உயிர் ஊட்டுகின்றது எனலாம். இங்கு சிவப்பு கலந்த மண்ணிறம் பரவிக் காணப்பட, வானம் மென்மையான நீலத்தன்மை கொண்டதாகவும், பாறைகள் சாம்பல் வர்ணத்திலும், உடையமைப்புக்கள் நீலம், மென்மையான மஞ்சள், இளம் சிவப்பு போன்ற வர்ணங்களைக் கொண்டும் பூரணப்படுத்தியிருக்கின்றார்.


பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: