Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

களனி அரச குமாரியை கடலினுள் விடுதல்

களனி அரச குமாரியை கடலினுள் விடுதல்

இவ்வோவியமானது களனி அரச குமாரியை கடலினுள் விடுதல், காவன்தீஸன் காப்பாற்றுதல் என்ற தலைப்பிற்கமைவானது.

 அதனை சோளியஸ் மெண்டிஸ் கீழைத்தேய அல்லது இலங்கைக்கே உரித்தான தேசிய மரபுக்கமைவாக இயற்கை வர்ணங்களின் கலவையைக் கொண்டு வர்ணம் தீட்டப்பட்டு பூரணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சோளியஸ் மெண்டிஸ் அவர்கள் களனி விகாரை, உடுப்பத்தாவ தவபிடவிகாரை போன்றவற்றில் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ளார். இருப்பினும் இவ்வோவியமானது களனி விகாரையில் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

இவர் முப்பரிமாணத் தன்மையினை இவ்வோவியத்தில் காட்டுவதற்காக மிக மென்மையான தூரிகைத் தடங்களைப் பயன்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் புராதன சரித்திர வரலாற்றுக் கதைகளை அதிகம் வரைந்த இவர் இதிலும் அதனை அடியொற்றியே வரைந்துள்ளார் என்பது வெளிப்படையாகும். 

உடலழகு, ஆடையழகு, லயத்துடன் கூடிய ஆடைச்சுருக்கம் என்பன இவருக்கே உரித்தான சில சித்திர தூரித்தட நுட்பங்களாகும். அவை இதிலும் காட்டப்பட்டுள்ளது. மஞ்சள் கலந்த வர்ணச்சேர்கை இவ்வோவியத்தில் பரவிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: