Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

கலைஞர். சோமபந்து வித்தியாபதி (இலங்கை)

கலைஞர். சோமபந்து வித்தியாபதி (இலங்கை)

இவர் பன்னிப்பிட்டிய என்ற கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற சிற்பி மட்டுமன்றி சிறந்த நாட்டிக்காரருமமாவார். எனவே இவரது வீட்டில் கோயில் ஓவியங்கள், பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் உள்நாட்டுக் கலைவடிவங்கள் என்பன காணப்பட்டன்.


இவர் தனது பத்தாவது வயதில் தாய்வழித்தாத்தாவிடம் ஓவியம், நடனம் தொடர்பான விடயங்களை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாது அதனைக் கற்றும் கொண்டார். இவர் தனது இடைநிலைக்கல்வியை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் கற்றார். 1945 இல் இந்தியா சென்று நவீன ஓவியங்கள் தொடர்பாக நந்தலால்போஸிடம் பயிற்சியினை பெற்றுக்கொண்டார். அதன் பின்பு புலமை பரிசில் கிடைத்து திவாங்கூர் பல்கலைக்கழத்தில் சிற்பம் தொடர்பாகக் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் காணப்படும் கதகளி நாடகம் தொடர்பாக தனது ஆயவினை மேற்கொண்டார்.

இலங்கையின் சிறந்த ஓவியர்களான ஜேரர்ஜ் கீட் மற்றும் சோளியஸ் மெணடீஸ் என்பர்கள் போலவே சுவரோவியங்களில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ண வேண்டும் என்ற முனைப்பில் செயற்பட்டவர். இந்த அடிப்படையில் இவருடைய அதிகளவான ஓவியங்கள் "வெல்லன்வில" என்ற இடத்தில் அமைந்துள்ள விகாரையில் காணப்படுகின்றது. இதிலும் குறிப்பாப "பத்தாசார" என்ற ஓவியம் தனித்துவமானது. இவருடைய ஓவியங்கள் ஜேரர்ஜ் கீட் மற்றும் சோளியஸ் மெண்டிஸ் போன்றவர்களது ஓவியங்களிலிருந்து வேறுபட்டதாக அமைந்து காணப்படுகினறது. 
இவர் காலனித்துவக் காலத்தில் ஐரோப்பிய மரபுகள் பிரபல்யம் பெற்ற காலப்பகுதியில் கீழைத்தேய அடையாளங்களை அல்லது மரபுகளைப் பாதுகாப்பதில் அக்கரை கொண்டு தனது ஓவியங்களில் அதனை நிலைநிறுத்தினார். இவருடைய ஓவியங்களில் காணப்படும் பிரகாசமற்ற வர்ணப்பயன்பாடு ஓவியத்திற்கு உயிர்பூட்டாவிட்டாலும் ஒரு விதக் கவர்ச்சியின் ஊடே இவ்வோவியங்கள் இன்றும் உயிர்வாழ்கின்றன என்று கூறப்படுகின்றது.

இவர் ஒரு ஓவியர் மட்டுமன்றி பாரம்பரிய நாட்டிக்காரருமாவார். அத்தோடு ஆடை மற்றும் மேடை வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். இவர் சித்திரசேனத் தியட்டர் தயாரிப்புகளில் கூடிய பங்களிப்புக்களை வழங்கினார். அத்தோடு திரைப்படத்துக்கான கலை இயக்குனராகவும் செயற்பட்டார். "வசந்துரு சிறித" என்ற திரைப்படத்தில் இவரது சிறப்பான பங்களிப்பினைக் காணக்கூடியதாக உள்ளது. இதுமட்டுமன்றி இவருடைய ஓவியங்கள் ரஸ்யாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்துப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.



பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: