ஓவியர் லியானடோ டாவின்ஸி அவர்களின் “கிறிஸ்துவின் ஞானஸ்தானம்” அல்லது “கிறிஸ்துவின் வெப்டிசம்” ஓவியம் ஒரு பார்வை
பதிவேற்றம்:
kathush
at
7:16 AM
ஓவியர் லியானடோ டாவின்ஸி அவர்களின் “கிறிஸ்துவின் ஞானஸ்தானம்” அல்லது “கிறிஸ்துவின் வெப்டிசம்” ஓவியம் ஒரு பார்வை
இவ்வோவியத்தினை மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த சிறந்த ஓவியரான லியானடோ டாவின்ஸி அவர்கள் வரைந்துள்ளார். இது “கிறிஸ்துவின் ஞானஸ்தானம்” அல்லது “கிறிஸ்துவின் வெப்டிசம்” என்று அழைக்கப்படுகின்றது. கன்வஸ் துணியில் எண்ணெய் வர்ணம் கொண்டு வரைந்துள்ளார்.
இடது கையில் சிலுவையை பற்றியவாறும் வலது கையினால் கிறிஸ்துவுக்கு ஜோர்தான் நதிக்கரையில் திருமுலுக்கு அருளப்பரால் ஞானஸ்தானம் வழங்குவதையும், வலது புறம் ஞானக்குழந்தைகளாக சித்தரிக்கப்பட்ட தன்மையில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் இரண்டுபேரும் காணப்படுகின்றனர்.
இவ்வோவியத்தில் முப்பரிமாணத்தன்மையினை காட்டுவதற்கு ஓவியர் கையாண்டுள்ள தூரிகைத் தடங்கள் மிக மென்மையானதாகவும், சில இடங்களில் கடும் வர்ணப்பயன்பாட்டுத் தன்மையினையும் காட்டியிருப்பதும் ஓவியரது சிறந்த கைத்தேர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆடையமைப்புக்கள், மனித உடலியற் கூற்று அம்சங்களுக்கு அமைவானதாக காட்டப்பட்டுள்ள மனித உடல் மெய்நிலையிருப்புக்கள் என்பன ஓவியத்துக்கு மேலும் உயிர் ஊட்டுகின்றது எனலாம். இங்கு சிவப்பு கலந்த மண்ணிறம் பரவிக் காணப்பட, வானம் மென்மையான நீலத்தன்மை கொண்டதாகவும், பாறைகள் சாம்பல் வர்ணத்திலும், உடையமைப்புக்கள் நீலம், மென்மையான மஞ்சள், இளம் சிவப்பு போன்ற வர்ணங்களைக் கொண்டும் பூரணப்படுத்தியிருக்கின்றார்.
0 comments: