ஓவியர் சோளியஸ் மெண்டிஸ்
பதிவேற்றம்:
kathush
at
10:33 AM
சொளியஸ் மெண்டிஸ்1920 இல் மகாவெவ என்ற இடத்தில் பிறந்தவர். இந்தியாவுக்கு சென்று அங்கு ஓவியம் கற்றதன் பின்னர்,தனக்கென ஒரு தனிப் பாணியை அமைத்து பல்வேறு ஓவியங்களை வரைந்தார். களனி விகாரை, உடுப்பத்தாவ தவபிட்ட விகாரை போன்றவற்றில் ஓவியங்கள் வரைந்து புகழ் பெற்றார். நவீன பௌத்த கலையை புதிய வழியில் திசை திருப்புவதற்கு காரணமாக இருந்தவரும் இவரே. களனி விகாரையில் மிக மென்மையான தூரிகை வீச்சினைக் கையாண்டு முப்பரிமாணத்தைக் காட்டி உள்ளார். உடல் அழகு, ஆடை அழகு என்பவற்றை மிகவும் சிறப்பாக காட்டி உள்ளார். சித்திரங்களில் வரலாற்றுக் கால ஆடைகளையே பயன்படுத்தி உள்ளார். லயத்துடன் கூடிய ஆடை சுருக்கம் ,மஞ்சள் கலந்த வர்ண சேர்க்கை போன்றன களனி விகாரை ஓவியங்களுக்கு மெருகேற்றுகின்றன. இவ்வோவியங்களுக்கான வர்ணங்கள் இயற்கையாக இவராலேயே தயாரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சங்கமித்தை வெள்ளரசு கள்ளியை இலங்கைக்கு கொண்டு வருதல், ஹேமமாலா-தந்த குமாரன் வருகை ,சரணங்கர தேரருக்கு சங்கராஜா பதவி வளங்கள்,விஜயனின் இலங்கை வருகை,சர்வ மித்திரர் எனும் பிராமனரிடம் சித்தார்த்தர் கல்வி பயிலல், புத்தர் களனி விகாரையை தரிசித்தல், புத்தர் பேய்களை அடக்குதல், சிம்மாசனத்திர்காக நாக அரசர்களிடையே ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்கபுத்தர் நாகதீபத்திற்கு வருகை தரல்,தலதா தரிசன, மஹியங்கனை யக்சதான விகாரையின் அரசி கடலுக்கு பலியாதல் , ஆங்கிலேயர் களனி விகாரையை அழித்தல்,சிவநோயபாத தரிசனம், தீகவாபி வருகை போன்றன களனி விகாரையில் இவரால் வரையப் பட்ட ஓவியங்களாகும்.
0 comments: