Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

ஓவியர் சோளியஸ் மெண்டிஸ்


சொளியஸ் மெண்டிஸ்1920 இல் மகாவெவ என்ற இடத்தில் பிறந்தவர். இந்தியாவுக்கு சென்று அங்கு ஓவியம் கற்றதன் பின்னர்,தனக்கென ஒரு தனிப் பாணியை அமைத்து பல்வேறு ஓவியங்களை வரைந்தார். களனி விகாரை, உடுப்பத்தாவ தவபிட்ட விகாரை போன்றவற்றில் ஓவியங்கள் வரைந்து புகழ் பெற்றார். நவீன பௌத்த கலையை புதிய வழியில் திசை திருப்புவதற்கு காரணமாக இருந்தவரும் இவரே. களனி விகாரையில் மிக மென்மையான தூரிகை வீச்சினைக் கையாண்டு முப்பரிமாணத்தைக் காட்டி உள்ளார். உடல் அழகு, ஆடை அழகு என்பவற்றை மிகவும் சிறப்பாக காட்டி உள்ளார். சித்திரங்களில் வரலாற்றுக் கால ஆடைகளையே பயன்படுத்தி உள்ளார். லயத்துடன் கூடிய ஆடை சுருக்கம் ,மஞ்சள் கலந்த வர்ண சேர்க்கை போன்றன களனி விகாரை ஓவியங்களுக்கு மெருகேற்றுகின்றன. இவ்வோவியங்களுக்கான வர்ணங்கள் இயற்கையாக இவராலேயே தயாரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சங்கமித்தை வெள்ளரசு கள்ளியை இலங்கைக்கு கொண்டு வருதல், ஹேமமாலா-தந்த குமாரன் வருகை ,சரணங்கர தேரருக்கு சங்கராஜா பதவி வளங்கள்,விஜயனின் இலங்கை வருகை,சர்வ மித்திரர் எனும் பிராமனரிடம் சித்தார்த்தர் கல்வி பயிலல், புத்தர் களனி விகாரையை தரிசித்தல், புத்தர் பேய்களை அடக்குதல், சிம்மாசனத்திர்காக நாக அரசர்களிடையே ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்கபுத்தர் நாகதீபத்திற்கு வருகை தரல்,தலதா தரிசன, மஹியங்கனை யக்சதான விகாரையின் அரசி கடலுக்கு பலியாதல் , ஆங்கிலேயர் களனி விகாரையை அழித்தல்,சிவநோயபாத தரிசனம், தீகவாபி வருகை போன்றன களனி விகாரையில் இவரால் வரையப் பட்ட ஓவியங்களாகும். நன்றி மின்னல் இணையத்தளம்
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

ஓவியர் எம்.சார்லிஸ்

இவர் 1880இல் அம்பலங்கொடை என்னும் ஊரில் பிறந்தார்.  இவர் சிறுவயதில் கலைஞன் ஹென்றிகஸிடம் ஓவியம் பயின்றார். பௌத்த சமய மறுமலர்ச்சிக்கு ஓவியங்களைப் பயன் படுத்திய ஒரே ஒரு கலைஞர் ஆவார். இவர் கொழும்பு ஓவியர் எனவும் பௌத்த விகாரை ஓவியங்களை வரைந்தலர் எனவும் சிறப்பிக்கப்படுகின்றார். மேலத்தேய கிறிஸ்தவ கலாச்சாரம் இலங்கையில் மேலோங்கி இருந்த காலத்தில் பௌத்த கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக பௌத்த விகாரைச்சித்திரங்களை வரைந்த ஓவியராவர்.

                                20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பௌத்தர்களுடைய இல்லங்களின் கத்தோலிக்க சமயப் பாடங்களால் நிறைந்திருந்ததைக் கண்ட இவர் பௌத்த மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக பல பௌத்த நிகழ்வுகளை வரைந்து அவற்றை ஜேர்மனிக்கு அனுப்பி லிதோ முறையில் அச்சுப் பதித்து பௌத்த சமயத்தை பின்பற்றும் மக்களின் இல்லங்களுக்கு வழங்கினார். இவருடைய ஓவியங்கள் பௌத்த வழகாரை ஓவியங்கள் எனவும் லிதோ அச்சுச் சித்திரம் எனவும் இரு வகைப்படும்.

இவருடைய ஓவியங்கள் காணப்படும் விகாரைகள்

1.கொழும்பு மாளிகாவத்த விகாரை
2. பொத்துப்பிட்டிய புர்வாராம விகாரை
3. இந்துருவ யாதேகம விகாரை
4. கரகம்பிட்டிய விகாரை

பௌத்த லிதோ அச்சுச் சித்திரங்கள்
1. சித்தாத்தர் பிறப்பு
2. சித்தாத்தரும் மகாமாய தேவியும்
3. சித்தாத்தரின் திருமணம்
4. லௌகீக வாழ்க்கையை துறந்து செல்லல்

இவருடைய ஓவியங்களில் மேலைத்தேய பாணி காணப்படுகின்றது. சார்லிஸ்  அவருடைய ஓவியங்களில் முப்பரிமாணத்தன்மை, ஒளி நிழல், தூரதரிசனம், பிரகாசமான வர்ணப் பாவனை பல்வேறு அலங்கார வடிவங்கள் காணப்பட்டமை இவருக்குறிய சிறப்பியல்பாகும்.

நன்றி மின்னல் இணையத்தளம்
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

ஓவியர் ரபேல் சான்சி யோ


பிறப்பு -ஏப்ரல் 6-1483 இடம் -ஊர்பினோ,இத்தாலி இறப்பு - ஏப்ரல் 06-1520 துறை - ஓவியம் கட்டிடம் பயிற்சி - பெஜினோ இயக்கம் - மறுமலர்ச்சி படைப்பு - எதென்ஸ் பாடசாலை ரபேல் சான்சியோ 1483ஆம் ஆண்டு மத்திய இத்தாலிய நகரமான உர்பினோவில் பிறந்தார் அவரது தந்தை சியோவன்னி தாய் மாஜியாசியர்லா இவரது தந்தை ஒரு கவிஞராகவும் ஓவியராகவும் இருந்தார் இவர் உருப்பி னோ மதிப்பார்ந்த அரசசபையில் இடையிடையே பணியாற்றி வந்தார். ரபேலின் தாய் 1491 இல் இறந்தார் அதனைத் தொடர்ந்து தந்தையின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார். 1494இல் இவரது 11 வயதில் இவரை அனாதையாக விட்டு விட்டு அவருடைய தந்தை இறந்தார். ரபேல் அவருடைய சித்தப்பாவன பர்டோலோமியா என்ற பாதிரியாரிடம் பாதுகாப்பில் இருந்து வந்தபோதும் அவருடைய தாய் மாமனாரான சிமோனிடம் நெருக்கமாக இருந்து வந்தார். ரபேல் வாழ்ந்த சூழல் கல்வி நிலையை பொறுத்த மட்டில் செழிப்பானது. இவர் ஓவியம் மட்டுமல்ல இலத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் கவிதை புனையும் றெ்றல் மிக்கவராகவும் காணப்பட்டார். மேலும் இவர் சிறுவயதுமுதல் மிகுந்த புத்திசாலித்தனமும் ஆக்கபுர்வமாவ கற்பனையும் உடையவராகக் காணப்பட்டார். தந்தையின் கலைப் பணியில் ஆர்வம் மிக்கவராகவும் காணப்பட்டார். பின்னர் பெருகினோவிடம் மனித உருவங்களை கற்று சிறந்த மாணவராக விளங்கினார் இதனால் என்னவோ இவர் உலகம் கண்டறிந்திருக்கின்ற அதியுன்னத மனோசக்தியுள்ள ஓவியர்களில் இவரும் ஒருவராவர். எனவே இவரை தெய்வீக புருசர் என அழைக்கப்படுவதில் வியப்புக்குறியதில்லை. இவர் தனது இரண்டாவது காலகட்டத்தில் புளோரன்ஸ் சென்று அங்கே பல ஓவியங்களை தீட்டினார். அதில் “கன்னிமேரியும் யேசுவும்” என்ற ஓவியம் சிறப்பானது ஆகும். இதனைத் தொடர்ந்து மூன்றாவது காலகட்டத்தில் இவர் ரோமிற்கு போப்பாண்டவரால் வரவழைக்கப்பட்டு அங்கே பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டார். அங்கு வத்திக்கான் தேவாலய வழிபாட்டு அறைகளில் ஓவியங்களை வரைந்தார். இக்காலத்தில் எதென்ஸ் பாடசாலை என்னும் சுவர் ஓவியம் வரைந்தார் . இந்த ஓவியம்தான் இவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. இவர் ஓவியம் வரைவதிலும் மட்டுமின்றி சிலை செதுக்குவதிலும் ஆர்வம் காட்டினார். உடலின் மேற்பகுதிகளை சித்தரிக்கும் சிலைகளை செதுக்குவதில் மிகந்த ஈடுபாடுடையவராக காணப்பட்டார். இதற்க சிறந்த எடுத்துக்காட்டாக 2ஆம் யுலியஸ் பாப்பரசரின் உருவச்சிலையை குறிப்பிடலாம். இவர் சர்ணங்களை கையாளல் வதில் சிறப்பு தேர்ச்சி மிக்கவராக காணப்பட்டார். இவர் தனது தகைமைத் திறனை ஒரு muraldecorator என்னும் சுவர் ஓவியம் மட்டும் இன்றி கட்டிடக் கலைஞராகவும் விளங்கினார். ஜியார்ஜியோ வாஸாரி என்னும் விமர்சகர் இவரது ஓவியங்கள் பற்றி விமர்சிக்கும் போது பின்வருமாறு கூறினார். “குழப்பமில்லாமல் ஓவியத்தில் தாம்சொல்ல வேண்டிய செய்தியை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்வதும் இயற்கைக் காட்சிகளுடன் ஒன்றிய உருவங்களை வரைவதும் இவரது சிறப்பம்சங்களாகும் டாவின்சியைவிட மிகுந்த மேன்மையுடன் தன்னுடைய ஓவியங்கள் அமைய வேண்டும் என்று விரும்பினார். அழகிய இயற்கைக்காட்சிகளாலும் இவரது ஓவியங்கள் புகழ்பெற்றன” என்றார் இருதியாக இவர் 10 நாட்கள் காச்சலினால் பீடிக்கப்பட்டு 1520 ஏப்ரல் - 06ஆம் திகதி மரணித்தார். ரபேலின் புகழ்மிக்க ஓவியங்கள் 1. சிஸ்ரைன் மேரி ( sistine madona) 2. ஏதன்ஸ் பாடசாலை(the school of athens) 3. நற்கருணைப் பகிர்வுthe dispute of he sacrement) 4. புனித மிக்கேலும் சாந்தனும்(the st.michael and the dragan) 5. புனித வாந்தரீன் அலக்சான்ரா( st.catherine of alexandria) 6. மூன்ற தேவதைகள்(three graces) 7. the finein the borgo ரபேலின் படைப்புத்தன்மை இவர் வரைந்த ஓவியங்கள் லியானாடோ டாவின்ஸி, மைக்கல் ஆஞ்சலோ பாணியைப் பின்பற்றி காணப்பட்டது. எடுத்துக்காட்டாக டாவின்சி வரைந்த கன்னியும் குழந்தையும் ஆனாளும் குழந்தையும் என்ற ஓவியத்தைப்பார்த்து சில ஓவியங்களை வரைந்துள்ளார் அடுத்து டாவின்ஸியின் “மொனாலிசா” ஓவியத்தைப்பார்த்துத்தான் “மாடலேனாடோனி” என்ற ஓவியத்தை வரைந்தார். மைக்கல் ஆஞ்சலோவின் பாதிப்பால் “ஏசாயா” ஓவியத்தை மாற்றி வரைந்தார். அந்த ஓவியத்தின் சிறப்பினால் ஸுனா என்ற ஊரில் தேவாலயம் ஒன்றில் ஓவியம் தீட்ட வாய்ப்பு கிடைத்தது. இவர் மைக்கல் ஆஞ்சலோவின் “சிஸ்ரைன்” தேவாலயத்தைப்பார்த்து அதே பாணியைப் பின்பற்றியே ஸினா தேவாலயத்தில் மிக அழகான ஓவியங்ளை தீட்டினார். இவ்வாறு இவரின் படைப்புக்கள் டாவின்ஸி, மைக்கல் என்போரின் ஓவியத்தன்மையை ஒத்துள்ளமை அவதானிக்க முடிகின்னது. 
அதென்ஸ் நகரில் உள்ள பாடசாலை 1: Zeno of Citium 2: Epicurus 3: unknown[13] 4: Boethius or Anaximander or Empedocles? 5: Averroes6: Pythagoras 7: Alcibiades or Alexander the Great? 8: Antisthenes or Xenophon? 9: unknown [14][13]or the Fornarina as a personification of Love [15] or (Francesco Maria della Rovere?) 10: Aeschines orXenophon? 11: Parmenides? 12: Socrates 13: Heraclitus (Michelangelo) 14: Plato (Leonardo da Vinci) 15: Aristotle 16: Diogenes 17: Plotinus (Donatello?) 18: Euclid or Archimedes with students (Bramante?) 19: Zoroaster 20: Ptolemy? R: Apelles (Raphael) 21: Protogenes (Il Sodoma, Perugino, orTimoteo Viti)[16] அதென்ஸ் நகரில் உள்ள பாடசாலை என்ற இந்த ஓவியம் டிஸ்புட்டா என்ற பாப்பரசர் இரண்டாம் ஜீலியசைக் கவர்ந்த ஓவியம் ஆகும். இவருக்கு சிறப்பை தேடிக் கொடுத்தது இந்தஓவியம் ஆகும். இவ் ஓவியம் சிறப்பு பொறக்காரணம் உலகத்தில் தலை சிறந்த தத்துவ ஞனிகளையும் ஓவியக்கலையில் மறுமலர்ச்சி காலத்து ஓவியங்களையும் அதென்ஸ் நகரில் உள்ள பாடசாலை என்பன ஓவியத்தில் சிறப்பாக காட்டப்பட்டமை ஆகும். இங்குவரையப்பட்ட தத்துவ ஞனியன அரிஸ்ரோட்டில், பிலேட்டோ,சோக்கிரட்டிஸ், தொலமி, தயோஜீல் ஹெரக்விடஸ் போன்றோர் குழுமியுள்ள கூட்டத்தையும் வரைந்ததுடன் தன்னையும் கறுப்பு நிறத் தொப்பியுடன் எட்டிப்பார்க்கும் வகையில் வரைப்பட்டமை சிறப்புக்குரியதாகும். இவ் ஓவியத்தில் மத நம்பிக்கையில்லாதவர்கள் புற மதத்தவர்கள் மற்றும் கிறிஸ்தவமதத்தவர்கள் இருசாராரின் சந்திப்புக்களையும் கருவாககக்கொண்டு தன்னுடைய கைவண்ணத்தின் மூலம் உருவாகியிருந்தார். இவ் ஓவியம் ஒரு மேடையமைப்பில் மெய்யியல், சட்டம், கவிதை மற்றும் வரலாறு ஆகியவற்றை அடையாளப்படுத்திக் காட்டும் மாதிரிகளான பண்டைய குழுக்களை வரைந்தமை இவ் ஓவியத்தை மேலும் சிறப்பிக்கச் செய்துள்ளது. இவ் ஓவியத்தில் தாடியுடன் இருக்கும் பிளேட்டோவின் உருவத்தை டாவின்ஸியின் தோற்றத்துடன் வரையப்பட்டுள்ளது மைக்கல் ஆங்சலோவின் முகம் மற்றும் உருவத்தோற்றம் டயோசினஸ் ஹெராக்ஸிடஸ் உருவம் போன்று வரையப்பட்டுள்ளது . தனது மிகவும் நெருங்கிய நண்பர்களான பிரமாண்டேயின் உருவத்தோற்றத்துடன் ஜோரொஸ்டர் ஈட்டியுடன் உள்ளது போல் வரையப்பட்டுள்ளது. இங்கு வரையப் பட்டுள் இவ் ஓவியம் மிகவும் எளிமையாகவும் அழகுடனும் காட்டப்பட்ட விதம் மிகவும் சிறப்பு மிக்கது ஆகும். இவ் அதென்ஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடம். என்னும் ஓவியம் தனது வாழ்நாளில் மறக்கமுடியாதவர்களின் முகச்சாயல்களை எடுத்துக்காட்டி உள்ளமை மிகவும் சிற்ப்புக்குரிய விடயம் ஆகும். நன்றி மின்னல் இணையத்தளம்
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

ஓவியர் ஏ.சீ.ஜீ.எஸ் அமரசேர

20 ஆம் நூற்றாண்டிற்கரிய இலங்கைச் சித்திரக்கலையின் ஆரம்ப காலத்து சித்திரக் கலைஞராவர் மரபுரீதியான கலையின் முன்னோடியான இவர் 1883 இல் பிறந்தார். இவர் காட்டூன் சித்திரங்களை வரைவதன் மூலம் கலைத்துரைக்கு பிரவேசித்தார். பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் 1891 இல் இலங்கைக் கலா சங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட முன்னோடிக் கலைஞர் ஆவர். இலங்கை அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த கலைஞர்களிடம் இருந்து பெற்ற கலைத்தாக்கத்தை இலங்கைக் கலாசங்கத்து கலைஞர்களின் ஆக்கங்களில் காணக் கூடியதாக இருந்தது. இவர் சித்திரப் படைப்புக்களில் ஐரோப்பிய மரபு ரீதியான கலைப்பாணியான,இயற்கை வாதம், தாத்வீக வாதம், றோமன்டிய் வாதம் போன்ற கலைப் பண்புகளைக் காணலாம். உயிர் ஓவியம் , யதார்த்த வாதம், தரைக்காடசி ஆகியவர்ரை வரைவதில் திறமை பெற்ற இவர் சித்திரம் வரைவதற்கு நீர்வர்ணம், எண்ணெய் வர்ணம் ஆகிய இரு வகைகளையும் பயன்படுத்தி உள்ளார். ஒளி நிழல் தொடர்பில் இவரிடம் காணப்பட்ட மரபுரீதியான “சியாறஸ்கியுறோ” கோட்பாடுகளை இவரது ஆக்கங்களில் காணலாம். (சியாற chiare- ஒளி,ஸ்கியுறோ scare - நிழல் என்னம் சொற்களின் இணைப்பால் “சியாறஸ்கியுறோ” என்னும் சொல் உருவாகியுள்ளது) இவரின் பிரசித்தி பெற்ற ஓவியங்கள் 1. தச்சனின் வீடு 2. பேய் ஓட்டுபவரின் மகள் 3. பூனைக்குட்டி 4. றீட் மாவத்தை(நீர்வர்ணம்) 5. அரசியல் தலைவர்களின் மார்பளவான பிரதிமைச் சித்திரம். 6 . பேய் ஓட்டுபனின் மகள் =================================================================== நன்றி மின்னல் இணையத்தளம். பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

ஓவியர் ஜோர்ஜ் கீற்

.கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் தனது பத்து வயதிலேயே சிலுவையில் இயேசு எனும் சித்திரத்தை வரைந்து புகழ் பெற்றார்.மல்வத்தை பீடத்தை சேர்ந்த பிக்குவான பின்னவள தீரானந்த தேரோவிடம் பௌத்த சமயக் கருத்துகளை கற்றார் .இரவீந்தரநாத் தாகுரின் நூல்கள் மூலம் இந்து சமயக் கருத்துகளை விளங்கி கொண்டார்.சம்ஸ்கிருத காவியமான கீத கோவிந்தத்தை மொழி . இந்திய இராகம் தொடர்பான விளக்கங்களை பெற்று அது தொடர்பான பல ஓவியங்களை வரைந்தார். கவி சிலுமின, முவதேவ்தாவத,போன்ற சிங்கள கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது ஆக்கங்களில் மேலைத்தேய, கீழைத்தேய கலப்பு,பிக்காசோவின்,தடித்த தெளிவான கோடுகளின் செல்வாக்கு போன்றவற்றை காணலாம். கிருஷ்ணன்- ராதை காதல் காட்சிகளை சித்தரிக்கும் ராகினி விராகினி, தலதா பெரகர,குயவன் வேலைத்தளம், நாயிகா,இயமனும் சாவித்ரியும், போன்றன இவரது சிறந்த ஆக்கங்களாகும். இவரது பௌத்த சமயம் சார் ஓவியங்கள் பொரளை கோதமி விகாரையில் காணப்படுகிறது. 
 நன்றி மின்னல் இணையத்தளம்.
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

குப்தர் கால புத்தர் சிலை:இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு

பழைமையும் சிறப்பும் வாய்ந்த 16 அடி உயர குப்தர் கால புத்தர் சிலையை, இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக அளிக்கவுள்ளது. கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயமான  தலதா மாளிகையின் சர்வதேச பௌத்த நூதனசாலையின் நுழைவாயிலில் இந்தச் சிலை வைக்கப்படவுள்ளது என இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இந்தியச் சிற்பக் கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை, ஐந்தாம் நூற்றாண்டு குப்தர் ஆட்சிக் காலத்தில் சாரனாத்தில் வடிவமைக்கப்பட்ட விக்கிரகத்தைப் போன்றதாகும்.
வெளிர் மண்ணிறத்திலான மணற்கற்களைக் கொண்டு இந்தச் சிலை வார்க்கப்பட்டுள்ளது.

2600 ஆம் ஆண்டு புத்த ஜெயந்தியை முன்னிட்டு இந்தச் சிலை இலங்கைக்கு அன்பளிப்பாக இந்தியாவால் வழங்கப்படுகின்றது.
இது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்கெனவே கையெழுத்திடப்பட்டதாக ராஜபக்ஷே அரசு தெரிவிக்கிறது.
=========================================================
நன்றி விகடன் செய்திகள் இணையத்தளம்.
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments:

ஓவியர் லியோனார்டோ டாவின்சி

புகழ்பெற்ற ஓவியரான லியோனார்டோ டாவின்சி, பத்து மனிதர்களின் ஆற்றலை ஒருங்கே கொண்ட பேரறிஞர் (ten men-in-one) எனப் போற்றப்பட்டவர். இவர், ஓவியர் மட்டுமன்றி அறிவியல் கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி, உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை, வடிவமைப்பாளர், போர்த்துறைப் பொறியாளர், என பல்துறைப் பேரறிஞராக விளங்கியவரே ஓவியர் டாவின்சி. எனினும், இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது மோனலிசா என்ற புன்னகை சிந்தும் புகழ்பெற்ற ஓவியமே எனக் கூறலாம்.

பன்முகப் பயிற்சியும், பல்வகைப் பேரறிவும் கொண்ட லியோனார்டோ டாவின்சி பிரபஞ்ச மனிதர் (universal man) எனப் போற்றப்பட்டவர், இந்தப் பட்டப் பெயருக்காக அவர் மூளை புதுப்புது கண்டுபிடிப்புகளாலும், உத்திகளாலும், கருவிகளாலும் நிறைந்திருந்தது. அவர் சுமார் 7,000 பக்கங்கள் உடற் கூறியல் உண்மைகள் பற்றி எழுதியிருந்தார்.

இவரது ஓவியங்கள் போர் உத்திகள், குறியீடுகள், பறக்கும் எந்திரங்கள், சமிக்கைகள், வண்ண ஓவியங்கள், புதிர்கள், நகர்ப்புற வடிகால் அமைப்புகள் என்று வியப்பூட்டும் கதம்பக் களஞ்சியமாய்க் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இவரது தந்தை மிகப் பணவசதி படைத்த ஒரு வழக்கறிராவார். 1452 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 15ம திகதி டாவின்சி மகனாகப் பிறந்தார். எனினும், டாவின்சிக்கு தாயின் அரவணைப்பு நீண்ட காலத்திற்குக் கிடைக்காத காரணத்தினால் தந்தையுடனும், சிறிய தந்தையுடனுமே தன்னுடைய இளமைக்காலத்தைக் களித்தார்.

தன்னுடைய 14ஆம் வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் (modeling) ஆர்வம் கொண்டிருந்தார். டாவின்சியின் ஆர்வத்தினைக் கண்ட அவரது தந்தை ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற சிற்பியிடம் அவரைப் பயிற்சிக்கு அனுப்பினார். அங்கே டா வின்சி பல்துறைப் பயிற்சியும் தனது முப்பதாவது வயது வரை பல்வேறு துறைகளில் கல்வி கற்பதிலும் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

ஆந்திரயாவில் பல பயிற்சிகளையும் பெற்றதன் பின்னர் ஃபிளாரன்சுக்குத் திரும்பிய டாவின்சி 1503இல் புகழ் பெற்ற மோனோ லிசா வண்ண ஓவியத்தை தீட்டத் துவங்கினார். அவரது ஓவியப் பணியரங்கத்தில் அமர்வதற்காக ஒவ்வொரு நாள் மாலையும் மோனோ லிசா வந்து சென்றார். மூன்றாண்டு கடின உழைப்பிற்குப் பின்னர் 1506 இல் இந்த ஓவியம் நிறைவு பெற்றது.

ஓவியத்தைக் கண்ட நாமே இத்தனை வருடங்களின் பின்னரும் வியப்பிலாழ்ந்து போகின்றோம். என்றால் அந்த ஓவியத்தினை வரைந்தவரின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியாது.

இந்த வியப்பு பல கோடி ஆண்டுகளாக மக்களிடம் நிலவி வருவதைக் காண்கின்றோம். இந்த மோனலிசா ஓவியம் பிரான்சிலுள்ள அருங்காட்சிசாலை ஒன்றில் இன்றும் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.

மோனோ லிசா ஓவியத்தை வரைந்த பின்னர், டாவின்சி பிரன்சுக்கார்களின் ஆட்சியிருந்த மிலன் நகருக்குத் திரும்பி 1506 முதல் 1513 வரை அங்கிருந்தார். அங்கு கிறிஸ்தவகோயிலில் வைத்து வணஙகத்தக்க ஓவியங்களைத் தீட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. குழந்தையுடன் இருக்கும் கன்னித்தாய் அவர் வரைந்த ஓவியங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பின்னர் 1513 ஆம் ஆண்டிலிருந்து தனது இறுதிக்காலம் வரை ரோம் நகரிலேயே முதலாம் ஃபிரான்சிஸ் மன்னரின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பு டாவின்சிக்குக் கிடைத்த்து. பிரான்சிஸ் மன்ன்ன் அவருக்கு மாத ஓய்வூதியம் வளங்கியதுடன், தனது நாட்டில் இருக்கச் செய்தார்.

சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்ட இவரின் “கடைசி விருந்து” (The Last Supper), “மோனா லிசா” (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியிருந்தார்.

கட்டிடக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் இறக்கைகளுடனும், மேலே சுழலும் விசிறியுடனும் கூடிய பல்வகைப்பட்ட பறக்கும் எந்திரங்களை வடிவமைத்து உருவாக்கியதுடன், நீர்க் கடிகாரம் ஒன்றையும் இவர் உருவாக்கினார். பொறியாளர்களுக்கு உதவும் பொருட்டு கட்டிடப் பொருள்களை மேலே தூக்கிச் செல்ல பளு தூக்கும் பொறியை வடிவமைத்துக் கொடுத்தவரும் இவரே. பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்ட லியோனார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் இப்பூவுலக வாழ்வை நீத்தார். டாவின்சி மறைந்து 5 நூற்றாண்டுகள் கடந்துள்ள போதிலும் அவர் வரைந்த ஓவியங்கள் மூலமாக புகழ் இன்றும் அழியாமல் உள்ளது.


நன்றி: மின்னல் இணையம்
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: