Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

ஓவியர் ரபேல் சான்சி யோ


பிறப்பு -ஏப்ரல் 6-1483 இடம் -ஊர்பினோ,இத்தாலி இறப்பு - ஏப்ரல் 06-1520 துறை - ஓவியம் கட்டிடம் பயிற்சி - பெஜினோ இயக்கம் - மறுமலர்ச்சி படைப்பு - எதென்ஸ் பாடசாலை ரபேல் சான்சியோ 1483ஆம் ஆண்டு மத்திய இத்தாலிய நகரமான உர்பினோவில் பிறந்தார் அவரது தந்தை சியோவன்னி தாய் மாஜியாசியர்லா இவரது தந்தை ஒரு கவிஞராகவும் ஓவியராகவும் இருந்தார் இவர் உருப்பி னோ மதிப்பார்ந்த அரசசபையில் இடையிடையே பணியாற்றி வந்தார். ரபேலின் தாய் 1491 இல் இறந்தார் அதனைத் தொடர்ந்து தந்தையின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார். 1494இல் இவரது 11 வயதில் இவரை அனாதையாக விட்டு விட்டு அவருடைய தந்தை இறந்தார். ரபேல் அவருடைய சித்தப்பாவன பர்டோலோமியா என்ற பாதிரியாரிடம் பாதுகாப்பில் இருந்து வந்தபோதும் அவருடைய தாய் மாமனாரான சிமோனிடம் நெருக்கமாக இருந்து வந்தார். ரபேல் வாழ்ந்த சூழல் கல்வி நிலையை பொறுத்த மட்டில் செழிப்பானது. இவர் ஓவியம் மட்டுமல்ல இலத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் கவிதை புனையும் றெ்றல் மிக்கவராகவும் காணப்பட்டார். மேலும் இவர் சிறுவயதுமுதல் மிகுந்த புத்திசாலித்தனமும் ஆக்கபுர்வமாவ கற்பனையும் உடையவராகக் காணப்பட்டார். தந்தையின் கலைப் பணியில் ஆர்வம் மிக்கவராகவும் காணப்பட்டார். பின்னர் பெருகினோவிடம் மனித உருவங்களை கற்று சிறந்த மாணவராக விளங்கினார் இதனால் என்னவோ இவர் உலகம் கண்டறிந்திருக்கின்ற அதியுன்னத மனோசக்தியுள்ள ஓவியர்களில் இவரும் ஒருவராவர். எனவே இவரை தெய்வீக புருசர் என அழைக்கப்படுவதில் வியப்புக்குறியதில்லை. இவர் தனது இரண்டாவது காலகட்டத்தில் புளோரன்ஸ் சென்று அங்கே பல ஓவியங்களை தீட்டினார். அதில் “கன்னிமேரியும் யேசுவும்” என்ற ஓவியம் சிறப்பானது ஆகும். இதனைத் தொடர்ந்து மூன்றாவது காலகட்டத்தில் இவர் ரோமிற்கு போப்பாண்டவரால் வரவழைக்கப்பட்டு அங்கே பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டார். அங்கு வத்திக்கான் தேவாலய வழிபாட்டு அறைகளில் ஓவியங்களை வரைந்தார். இக்காலத்தில் எதென்ஸ் பாடசாலை என்னும் சுவர் ஓவியம் வரைந்தார் . இந்த ஓவியம்தான் இவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. இவர் ஓவியம் வரைவதிலும் மட்டுமின்றி சிலை செதுக்குவதிலும் ஆர்வம் காட்டினார். உடலின் மேற்பகுதிகளை சித்தரிக்கும் சிலைகளை செதுக்குவதில் மிகந்த ஈடுபாடுடையவராக காணப்பட்டார். இதற்க சிறந்த எடுத்துக்காட்டாக 2ஆம் யுலியஸ் பாப்பரசரின் உருவச்சிலையை குறிப்பிடலாம். இவர் சர்ணங்களை கையாளல் வதில் சிறப்பு தேர்ச்சி மிக்கவராக காணப்பட்டார். இவர் தனது தகைமைத் திறனை ஒரு muraldecorator என்னும் சுவர் ஓவியம் மட்டும் இன்றி கட்டிடக் கலைஞராகவும் விளங்கினார். ஜியார்ஜியோ வாஸாரி என்னும் விமர்சகர் இவரது ஓவியங்கள் பற்றி விமர்சிக்கும் போது பின்வருமாறு கூறினார். “குழப்பமில்லாமல் ஓவியத்தில் தாம்சொல்ல வேண்டிய செய்தியை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்வதும் இயற்கைக் காட்சிகளுடன் ஒன்றிய உருவங்களை வரைவதும் இவரது சிறப்பம்சங்களாகும் டாவின்சியைவிட மிகுந்த மேன்மையுடன் தன்னுடைய ஓவியங்கள் அமைய வேண்டும் என்று விரும்பினார். அழகிய இயற்கைக்காட்சிகளாலும் இவரது ஓவியங்கள் புகழ்பெற்றன” என்றார் இருதியாக இவர் 10 நாட்கள் காச்சலினால் பீடிக்கப்பட்டு 1520 ஏப்ரல் - 06ஆம் திகதி மரணித்தார். ரபேலின் புகழ்மிக்க ஓவியங்கள் 1. சிஸ்ரைன் மேரி ( sistine madona) 2. ஏதன்ஸ் பாடசாலை(the school of athens) 3. நற்கருணைப் பகிர்வுthe dispute of he sacrement) 4. புனித மிக்கேலும் சாந்தனும்(the st.michael and the dragan) 5. புனித வாந்தரீன் அலக்சான்ரா( st.catherine of alexandria) 6. மூன்ற தேவதைகள்(three graces) 7. the finein the borgo ரபேலின் படைப்புத்தன்மை இவர் வரைந்த ஓவியங்கள் லியானாடோ டாவின்ஸி, மைக்கல் ஆஞ்சலோ பாணியைப் பின்பற்றி காணப்பட்டது. எடுத்துக்காட்டாக டாவின்சி வரைந்த கன்னியும் குழந்தையும் ஆனாளும் குழந்தையும் என்ற ஓவியத்தைப்பார்த்து சில ஓவியங்களை வரைந்துள்ளார் அடுத்து டாவின்ஸியின் “மொனாலிசா” ஓவியத்தைப்பார்த்துத்தான் “மாடலேனாடோனி” என்ற ஓவியத்தை வரைந்தார். மைக்கல் ஆஞ்சலோவின் பாதிப்பால் “ஏசாயா” ஓவியத்தை மாற்றி வரைந்தார். அந்த ஓவியத்தின் சிறப்பினால் ஸுனா என்ற ஊரில் தேவாலயம் ஒன்றில் ஓவியம் தீட்ட வாய்ப்பு கிடைத்தது. இவர் மைக்கல் ஆஞ்சலோவின் “சிஸ்ரைன்” தேவாலயத்தைப்பார்த்து அதே பாணியைப் பின்பற்றியே ஸினா தேவாலயத்தில் மிக அழகான ஓவியங்ளை தீட்டினார். இவ்வாறு இவரின் படைப்புக்கள் டாவின்ஸி, மைக்கல் என்போரின் ஓவியத்தன்மையை ஒத்துள்ளமை அவதானிக்க முடிகின்னது. 
அதென்ஸ் நகரில் உள்ள பாடசாலை 1: Zeno of Citium 2: Epicurus 3: unknown[13] 4: Boethius or Anaximander or Empedocles? 5: Averroes6: Pythagoras 7: Alcibiades or Alexander the Great? 8: Antisthenes or Xenophon? 9: unknown [14][13]or the Fornarina as a personification of Love [15] or (Francesco Maria della Rovere?) 10: Aeschines orXenophon? 11: Parmenides? 12: Socrates 13: Heraclitus (Michelangelo) 14: Plato (Leonardo da Vinci) 15: Aristotle 16: Diogenes 17: Plotinus (Donatello?) 18: Euclid or Archimedes with students (Bramante?) 19: Zoroaster 20: Ptolemy? R: Apelles (Raphael) 21: Protogenes (Il Sodoma, Perugino, orTimoteo Viti)[16] அதென்ஸ் நகரில் உள்ள பாடசாலை என்ற இந்த ஓவியம் டிஸ்புட்டா என்ற பாப்பரசர் இரண்டாம் ஜீலியசைக் கவர்ந்த ஓவியம் ஆகும். இவருக்கு சிறப்பை தேடிக் கொடுத்தது இந்தஓவியம் ஆகும். இவ் ஓவியம் சிறப்பு பொறக்காரணம் உலகத்தில் தலை சிறந்த தத்துவ ஞனிகளையும் ஓவியக்கலையில் மறுமலர்ச்சி காலத்து ஓவியங்களையும் அதென்ஸ் நகரில் உள்ள பாடசாலை என்பன ஓவியத்தில் சிறப்பாக காட்டப்பட்டமை ஆகும். இங்குவரையப்பட்ட தத்துவ ஞனியன அரிஸ்ரோட்டில், பிலேட்டோ,சோக்கிரட்டிஸ், தொலமி, தயோஜீல் ஹெரக்விடஸ் போன்றோர் குழுமியுள்ள கூட்டத்தையும் வரைந்ததுடன் தன்னையும் கறுப்பு நிறத் தொப்பியுடன் எட்டிப்பார்க்கும் வகையில் வரைப்பட்டமை சிறப்புக்குரியதாகும். இவ் ஓவியத்தில் மத நம்பிக்கையில்லாதவர்கள் புற மதத்தவர்கள் மற்றும் கிறிஸ்தவமதத்தவர்கள் இருசாராரின் சந்திப்புக்களையும் கருவாககக்கொண்டு தன்னுடைய கைவண்ணத்தின் மூலம் உருவாகியிருந்தார். இவ் ஓவியம் ஒரு மேடையமைப்பில் மெய்யியல், சட்டம், கவிதை மற்றும் வரலாறு ஆகியவற்றை அடையாளப்படுத்திக் காட்டும் மாதிரிகளான பண்டைய குழுக்களை வரைந்தமை இவ் ஓவியத்தை மேலும் சிறப்பிக்கச் செய்துள்ளது. இவ் ஓவியத்தில் தாடியுடன் இருக்கும் பிளேட்டோவின் உருவத்தை டாவின்ஸியின் தோற்றத்துடன் வரையப்பட்டுள்ளது மைக்கல் ஆங்சலோவின் முகம் மற்றும் உருவத்தோற்றம் டயோசினஸ் ஹெராக்ஸிடஸ் உருவம் போன்று வரையப்பட்டுள்ளது . தனது மிகவும் நெருங்கிய நண்பர்களான பிரமாண்டேயின் உருவத்தோற்றத்துடன் ஜோரொஸ்டர் ஈட்டியுடன் உள்ளது போல் வரையப்பட்டுள்ளது. இங்கு வரையப் பட்டுள் இவ் ஓவியம் மிகவும் எளிமையாகவும் அழகுடனும் காட்டப்பட்ட விதம் மிகவும் சிறப்பு மிக்கது ஆகும். இவ் அதென்ஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடம். என்னும் ஓவியம் தனது வாழ்நாளில் மறக்கமுடியாதவர்களின் முகச்சாயல்களை எடுத்துக்காட்டி உள்ளமை மிகவும் சிற்ப்புக்குரிய விடயம் ஆகும். நன்றி மின்னல் இணையத்தளம்
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: