ஓவியர் ஏ.சீ.ஜீ.எஸ் அமரசேர
பதிவேற்றம்:
kathush
at
10:24 AM
20 ஆம் நூற்றாண்டிற்கரிய இலங்கைச் சித்திரக்கலையின் ஆரம்ப காலத்து சித்திரக் கலைஞராவர் மரபுரீதியான கலையின் முன்னோடியான இவர் 1883 இல் பிறந்தார். இவர் காட்டூன் சித்திரங்களை வரைவதன் மூலம் கலைத்துரைக்கு பிரவேசித்தார். பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் 1891 இல் இலங்கைக் கலா சங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட முன்னோடிக் கலைஞர் ஆவர்.
இலங்கை அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த கலைஞர்களிடம் இருந்து பெற்ற கலைத்தாக்கத்தை இலங்கைக் கலாசங்கத்து கலைஞர்களின் ஆக்கங்களில் காணக் கூடியதாக இருந்தது. இவர் சித்திரப் படைப்புக்களில் ஐரோப்பிய மரபு ரீதியான கலைப்பாணியான,இயற்கை வாதம், தாத்வீக வாதம், றோமன்டிய் வாதம் போன்ற கலைப் பண்புகளைக் காணலாம்.
உயிர் ஓவியம் , யதார்த்த வாதம், தரைக்காடசி ஆகியவர்ரை வரைவதில் திறமை பெற்ற இவர் சித்திரம் வரைவதற்கு நீர்வர்ணம், எண்ணெய் வர்ணம் ஆகிய இரு வகைகளையும் பயன்படுத்தி உள்ளார். ஒளி நிழல் தொடர்பில் இவரிடம் காணப்பட்ட மரபுரீதியான “சியாறஸ்கியுறோ” கோட்பாடுகளை இவரது ஆக்கங்களில் காணலாம். (சியாற chiare- ஒளி,ஸ்கியுறோ scare - நிழல் என்னம் சொற்களின் இணைப்பால் “சியாறஸ்கியுறோ” என்னும் சொல் உருவாகியுள்ளது)
இவரின் பிரசித்தி பெற்ற ஓவியங்கள்
1. தச்சனின் வீடு
2. பேய் ஓட்டுபவரின் மகள்
3. பூனைக்குட்டி
4. றீட் மாவத்தை(நீர்வர்ணம்)
5. அரசியல் தலைவர்களின் மார்பளவான பிரதிமைச் சித்திரம்.
6 . பேய் ஓட்டுபனின் மகள்
===================================================================
.
0 comments: