Follow us

இலங்கையின் கல்வி வரலாற்றில் உயர்தரத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கான ஓர் முயற்சி. தெரிந்ததை பகிர்ந்து கொள்கின்றேன். படித்துப் பயன் பெறுங்கள்

ஓவியர் ஜோர்ஜ் கீற்

.கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் தனது பத்து வயதிலேயே சிலுவையில் இயேசு எனும் சித்திரத்தை வரைந்து புகழ் பெற்றார்.மல்வத்தை பீடத்தை சேர்ந்த பிக்குவான பின்னவள தீரானந்த தேரோவிடம் பௌத்த சமயக் கருத்துகளை கற்றார் .இரவீந்தரநாத் தாகுரின் நூல்கள் மூலம் இந்து சமயக் கருத்துகளை விளங்கி கொண்டார்.சம்ஸ்கிருத காவியமான கீத கோவிந்தத்தை மொழி . இந்திய இராகம் தொடர்பான விளக்கங்களை பெற்று அது தொடர்பான பல ஓவியங்களை வரைந்தார். கவி சிலுமின, முவதேவ்தாவத,போன்ற சிங்கள கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது ஆக்கங்களில் மேலைத்தேய, கீழைத்தேய கலப்பு,பிக்காசோவின்,தடித்த தெளிவான கோடுகளின் செல்வாக்கு போன்றவற்றை காணலாம். கிருஷ்ணன்- ராதை காதல் காட்சிகளை சித்தரிக்கும் ராகினி விராகினி, தலதா பெரகர,குயவன் வேலைத்தளம், நாயிகா,இயமனும் சாவித்ரியும், போன்றன இவரது சிறந்த ஆக்கங்களாகும். இவரது பௌத்த சமயம் சார் ஓவியங்கள் பொரளை கோதமி விகாரையில் காணப்படுகிறது. 
 நன்றி மின்னல் இணையத்தளம்.
பதிவேற்றம்:"கலைஞர்.ஏ.ஓ.அனல்".

0 comments: