குப்தர் கால புத்தர் சிலை:இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு
பதிவேற்றம்:
kathush
at
1:52 AM
பழைமையும் சிறப்பும் வாய்ந்த 16 அடி உயர குப்தர் கால புத்தர் சிலையை, இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக அளிக்கவுள்ளது. கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயமான தலதா மாளிகையின் சர்வதேச
பௌத்த நூதனசாலையின் நுழைவாயிலில் இந்தச் சிலை வைக்கப்படவுள்ளது என இலங்கை
அரசு தெரிவிக்கிறது.
இந்தியச் சிற்பக் கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை,
ஐந்தாம் நூற்றாண்டு குப்தர் ஆட்சிக் காலத்தில் சாரனாத்தில்
வடிவமைக்கப்பட்ட விக்கிரகத்தைப் போன்றதாகும்.
வெளிர் மண்ணிறத்திலான மணற்கற்களைக் கொண்டு இந்தச் சிலை வார்க்கப்பட்டுள்ளது.
வெளிர் மண்ணிறத்திலான மணற்கற்களைக் கொண்டு இந்தச் சிலை வார்க்கப்பட்டுள்ளது.
2600 ஆம் ஆண்டு புத்த ஜெயந்தியை முன்னிட்டு இந்தச் சிலை இலங்கைக்கு அன்பளிப்பாக இந்தியாவால் வழங்கப்படுகின்றது.
இது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்கெனவே கையெழுத்திடப்பட்டதாக ராஜபக்ஷே அரசு தெரிவிக்கிறது.
=========================================================
.
0 comments: